Sinhala (Sri Lanka)English (United Kingdom)
முகப்பு ஆளுநர் கௌரவ. சீ. நன்த மெத்திவ்

தற்போதைய கௌரவ ஆளுநர் சீ. நந்த மெத்திவ் அவர்கள்

alt

அரை நூற்றாண்டுகால அரசியல் அனுபவங்களினால் பரிபூரண நிலையை அடைந்துள்ள தற்போதைய ஆளுநர் சீ.நந்தமெத்திவ் அவர்கள் 2003.04.25ஆம் திகதி முதல் ஊவா மாகாண ஆளுநராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார்.

33 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராகவும் பிரதி அமைச்சராகவும், மாவட்ட மந்திரியாக மற்றும் அமைச்சராக மக்கள் சேவையில் ஈடுபட்டிருந்த அவர் பல அரசாங்கங்களின் கீழ் இளைஞர் விவகார விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி, துறைமுக மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் பதவி, துறைமுக விமான சேவைகள் மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பதவி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி பிரதி அமைச்சர் பதவி, இரத்தினபுரி மாவட்ட அமைச்சர் பதவி போன்ற பல பதவிகளை வகித்துள்ளார்.

2003ஆம் ஆண்டு முதல் ஆளுநர் பதவியின் உரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி  ஊவா மாகாணத்தின் அபிவிருத்திக்காக அவர் பெரும் சேவையாற்றிக் கொண்டிருக்கிறார். வறுமைநிலை உயர்ந்திருக்கின்ற ஊவா மாகாணத்தில் மக்களின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் என்பவற்றை மேம்படுத்துவதற்கு ஆளுநர் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். குறிப்பாக மாகாணத்தின் ஆங்கிலக் கல்வி, தகவல் தொழில்நுட்பம் போன்று கைத்தொழில் துறையை மேம்படுத்துவது தொடர்பில் அவர் தனது அபிவிருத்திச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளார்.

ஏழாண்டு காலமாக ஊவா மாகாணத்தை சவால்களிலிருந்து சாதனைகளாக மாற்றி அந்த உன்னத பணிக்கு விடாமுயற்சியுடன் ஊக்கமளிக்கின்ற அவர் தனது நிர்வாக அறிவைப் பயன்படுத்தி கடந்த காலத்திலிருந்து பெருமைமிக்க ஊவா வெல்லஸ்ஸவை புனரமைக்கின்ற துணிச்சலான முயற்சிக்கு தோள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.

 
டிசெம்பர் 2017
S M T W T F S
26 27 28 29 30 1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31 1 2 3 4 5 6