Sinhala (Sri Lanka)English (United Kingdom)
முகப்பு ஊவா மாகாணம்

ஊவா மாகாணம்

I. ஊவா மாகாண கொடி

alt

சிங்கள மன்னர் காலத்தில் இலங்கை பன்னிரண்டு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு ஆளப்பட்டதோடு அவ்வப் பிரதேசங்களுக்கு பன்னிரண்டு கொடிகள் குறித்தொதுக்கப்பட்டிருந்தன. அதன் பிரகாரம் அழகு, அஹிம்சை, உயர்வு, அரசருக்குரிய தன்மை போன்ற பண்புகளை எடுத்துக் காட்டுவதற்கு அன்னப் பறவையின் உருவம் பொறித்த கொடி ஊவா பிரதேசத்துக்காகக் குறிக்கப்பட்டுள்ளது.

கி.பி 1798 – 1815 காலப் பகுதியில் கண்டி இராச்சியத்தில் ஆட்சிபுரிந்த ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க மன்னரால் ஊவா பிரதேசத்துக்குப் பரிசாக அளிக்கப்பட்ட கொடியை இன்றும் தேசிய அரும்பொருட் காட்சி சாலையில் காணக்கூடியதாக இருக்கின்றது. (பண்டிதர் நாவுல்லே தம்மானந்த தேரரின் ஊவா வரலாறு என்ற நூலைத் தழுவியது)

 

II. ஊவா மாகாண மலர்

alt
குருளுராஜ - பொக்ஸ்டேல் ஓகிட்
ஊவா மாகாண மலராக குறிக்கப்பட்டுள்ள குருளுராஜ தாவரவியலில் Rhynchostylis retusa  எனக்குறிப்பிடப்படுகின்ற அதே நேரத்தில் Orchidaceae குடும்பத்தின் Rhynchostylis retusa பிரிவைச் சேர்ந்ததாகும். இத்தாவரம் ஆங்கில மொழியில் 'Foxtail Orchid' மற்றும் 'atticaloa Orchid' ஆகிய பெயர்களில் குறிப்பிடப்படுகின்றன.
இது வனவிலங்குகள் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட முக்கிய செடிகளாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள Rhnchostylis genius பிரிவைச் சேர்ந்த இலங்கையில் காணக்கூடியதாகவுள்ள மிக அரிதான ஒரே ஓக்கிட் தாவரமாகும்.
நவம்பர் மாதம் முதல் ஏப்பிறல் மாதம் பூக்கள் பூக்கும் இம்மலர் வீடுகளில் அலங்காரத்திற்காக வளர்க்கப்படுகின்ற அதே நேரத்தில் ஒளடத குணமும் கொண்டதாகும்.
 

 

 
ஜுலை 2018
S M T W T F S
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31 1 2 3 4